கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட கொரோனாவால் தியேட்டர்கள் மூடப்பட்டது. 8மாத காலத்திற்கு பின் வரும் நவம்பர் 10 முதல் தியேட்டரை திறந்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
அதற்காக கடந்த 1 வார காலமாக தியேட்டர்களில் மருந்துகள் அடிக்கப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு ஒரு இருக்கைக்கும் மற்றொரு இருக்கைக்கும் இடையில் இடைவெளி விடப்பட்டு பிரிக்கப்படும் பணிகள் நடந்து வருகிறது.
தீபாவளி வருவதால் புதிய படங்கள் தியேட்டர்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் டிஜிட்டல் முறையில் திரையிடப்படும் படங்களில் விபிஎஃப் கட்டணத்தை யார் செலுத்துவது என்ற பிரச்சினை உள்ளதால் புதிய படங்கள் வெளிவருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனால் பழைய திரைப்படங்கள் மற்றும் மாற்றுமொழி படங்கள் தான் முதலில் வெளிவர இருப்பதாக கூறப்படுகிறது.