புதுவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன்  – சன்னி லியோன்

புதுவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன் – சன்னி லியோன்

ஹிந்தியில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். இவர் தற்போது அனாமிகா என்ற வெப்சீரிஸில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில், “நான் கவர்ச்சியாக நடிப்பேன் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். அப்படி நடிப்பதில் எனக்கு எந்த விதமான பிரச்சனையும் இல்லை. ஆனால் இப்படத்தில் சண்டை காட்சிகள் இருக்கின்றது.

நல்ல கதாபாத்திரம் உள்ளது. காதல் காட்சிகள் இருக்கின்றது. மேலும் நெருக்கமான காட்சிகளும் உள்ளது. ஆனால் பொதுவாக எதிர்பார்க்கும் கதாபாத்திரம் இது இல்லை.

நான் எனது ரசிகர்களை மிகவும் நேசிக்கிறேன். அவர்கள் நான் எதை செய்தாலும் ஏற்றுக்கொள்கிறார்கள் சில சமயத்தில் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

ஒவ்வொரு படத்திலும் புதுவிதமான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன். நான் அடுத்தடுத்து புது விதமான கதாபாத்திரங்களில் நடித்து என்னிடம் உள்ள திறமைகளை வெளிகாட்டுவேன்” என்று கூறியுள்ளார்.