யாரோ போல என்னை பார்க்க… காதலில் தோற்ற கவினுக்கு சோக பாட்டு டெடிகேட்.. வைரல் வீடியோ

287
kavin

பிக்பாஸ் வீட்டில் காதலில் தோல்வியுற்ற கவினுக்காக நெட்டிசன்கள் உருவாக்கிய பாடல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தது முதல் காதல் மன்னனாக வலம் வருபவர் கவின், தொடக்கத்தில் அபிராமியிடம் நெருக்கம் காட்டியவர் அதன்பின் சாக்ஷியிடம் நெருக்கமாக பழகினார். அவ்வப்போது லாஸ்லியாவிடமும் நெருக்கமாக பழகி வந்தார். அபிராமி, சாக்‌ஷி இருவரும் வெளியேறியபின் லாஸ்லியாவுக்கு ரூட் விட்டு வருகிறார். ஆனால் லாஸ்லியா தன் முடிவை உறுதியாக கூறாத நிலையிலும் அவரை தொடர்ந்து கவின் வற்புறுத்தி வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த லாஸ்லியாவின் தந்தை தாய் மற்றும் சகோதரிகள் லாஸ்லியாவிற்கு ‘இது தேவையில்லை விளையாட்டில் கவனம் செலுத்து’ என அறிவுரை கூறினர். இதைக் கண்ட கவின் குற்றவுணர்ச்சி அடைந்து எதுவும் பேச முடியாமல் தனியாக சென்று அழுதார். லாஸ்லியாவின் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்கவும் தயாராக இருந்தார். எனவே இனிமேல் லாஸ்லியா அவரிடம் நெருக்கம் காட்ட மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கவினுக்காக நெட்டிசன்கள் ஒரு சோக கீதம் பாடலை உருவாக்கியுள்ளனர். அந்த பாடல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

பாருங்க:  அறநிலையத்துறையை நிதி கொடுக்க விடாமல் தடுப்பு ! ஹெச் ராஜா பகிர்ந்த தகவல்!