ரசிகர்களை நாய்கள் எனக் கூறிய சாக்‌ஷி – கொதிப்படைந்த நெட்டிசன்கள்

358

பிக்பாஸ் வீட்டில் நடிகை சாக்‌ஷி தெரிவித்துள்ள கருத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் வனிதா விஜயகுமார் வந்த பின் அவரால் பல பிரச்சனைகள் நிகழ்ந்து வருகிறது. கவின், சாண்டி, தர்ஷன், ஷெரின் என ஒருவரையும் அவர் விட்டு வைக்கவில்லை. குறிப்பாக ஷெரினுக்கும், தர்ஷனுக்கும் இடையே காதல் இருப்பதாகவும், தர்ஷன் தோல்வி அடைந்தால் அதற்கு ஷெரினே காரணம் என என வனிதா புகார் கூற இது ஷெரினுக்கு கோபத்தை ஏற்படுத்திவிட்டது. இதனால், வனிதாவிடம் அவர் சண்டை போட்டார்.

அதன்பின் சேரனிடம், சாக்‌ஷியிடமும் இதுபற்றி கூற அவர் கதறி அழுதார். அப்போது ஷெரினுக்கு ஆறுதல் கூறிய சாக்‌ஷி ‘ தெருவில் செல்லும் நாய்கள் நம்மை பார்த்து குறைத்தால் ‘நீ கவலைப்படுவாயா? நான் வெளியே இருக்கும் மக்களை சொன்னேன்’ எனக்கூறினார்.

இது இந்நிகழ்ச்சியை பார்க்கும் பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியை பர்ப்பவர்கள் எல்லாம் நாய்களா? இப்படி பேசியதற்கு சாக்‌ஷி மன்னிப்பு கேட்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

 

பாருங்க:  கார்த்திகை பொறி செய்வது எப்படி
Previous articleவிருது கொடுத்த சாக்‌ஷி… தூக்கி எறிந்த லாஸ்லியா… பிக்பாஸ் வீடியோ
Next articleஇது ஜெயிலும் இல்ல… வனிதா வார்டனும் இல்ல.. கொதித்தெழுந்த ஷெரின்..