முதல் காட்சியே அமங்களமாக வைத்த பாரதிராஜா- அதிர்ச்சியடைந்த நெப்போலியன்

முதல் காட்சியே அமங்களமாக வைத்த பாரதிராஜா- அதிர்ச்சியடைந்த நெப்போலியன்

பிரபல நடிகர் நெப்போலியன், எம்.எல்.ஏ , மத்திய அமைச்சர் என பல பொறுப்புகளை வகித்தவர் இவர். முதன் முதலில் உதயம் படம் பார்த்து விட்டு அதில் வரும் நாகார்ஜூனா போலவே இருப்பதாக பலரும் உசுப்பேற்றி விட தெரிந்த ஒரு அரசியல்வாதியின் மூலம் இயக்குனர் பாரதிராஜாவை பிடித்து புது நெல்லு புது நாத்து படத்தில் முதன் முதலில் வில்லனாக அறிமுகமானார். ஹீரோவாக எதிர்பார்த்த இவருக்கு வில்லன் வேடத்தை கொடுத்துள்ளார் இயக்குனர்.

சினிமா மீது ஆர்வம் கொண்ட நெப்போலியன் 27 வயதில் 60வயது கிழவன் வேடத்தில் முதல் படத்திலேயே நடித்துள்ளார். முதல் காட்சியே நெப்போலியன், ஒருவனை கயிற்றில் தொங்க விடுவது போல காட்சி வைத்தாராம் இயக்குனர் பாரதிராஜா.

முதல் முறையாக நடிக்க போகிறோம் இப்படி காட்சி வைக்கிறாரே என தயங்கி இருக்கிறார் நெப்போலியன். என்னயா பிடிக்கலயா  என கேட்ட பாரதிராஜா நெப்போலியன் நிலையை புரிந்து கொண்டு ஸ்பாட்டிலேயே மங்களகரமா டயலாக் ஒன்றை உடனடியாக எழுதி இருக்கிறார்.

வர்ற லட்சுமிய யார்றா தடுத்து நிறுத்த முடியும் என நெப்போலியனுக்கு வசனம் எழுதி கொடுத்து அப்படி ஒரு காட்சியில் நடிக்க வைத்து விட்டு அதற்கு பிறகுதான் அக்காட்சியை எடுத்துள்ளார் பாரதிராஜா.

இதை டூரிங் டாக்கீஸ் சேனல் இண்டர்வியூ ஒன்றில் நெப்போலியன் சொல்லி இருக்கிறார்.