cinema news
ரஜினி பட இயக்குனர் நெல்சன் மாற்றப்படுகிறாரா?
கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் மூலம் திரையுலகில் பிரபலமானவர் நெல்சன்.
முந்தைய இரண்டு படங்களும் வெற்றி பெற்ற நிலையில் பீஸ்ட் படத்தை விஜயை வைத்து இயக்கும் வாய்ப்பை சன் பிக்சர்ஸ் வழங்கியது.
ஆனால் பீஸ்ட் படம் படுதோல்வி என்று சொல்லப்படுகிறது. அதற்கு எதிராக நெகட்டிவான கடும் விமர்சனங்கள் வர துவங்கி உள்ளது.
இந்த நிலையில் பீஸ்ட் படம் வெளிவரும் முன்பே இயக்குனர் நெல்சன் ரஜினியின் 169வது படத்தை இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பீஸ்ட் படத்தை ஸ்பெஷலாக பார்த்த ரஜினி அதிருப்தி அடைந்துள்ளதாகவும் அதனால் அவர் பீஸ்ட் பட இயக்குனர் தன் 169வது படத்துக்கு வேண்டாம் என முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடனே சன் பிக்சர்ஸும், தேசிங்கு பெரியசாமி அல்லது அட்லியை போட்டு ரஜினி படத்தை ஆரம்பிக்கலாம் என யோசித்து வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்திகள் எந்த அளவு உண்மை என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பார்க்கலாம்.