டிக்கெட் கேட்ட விவகாரத்தில் அரசு பேருந்து ஓட்டுனர் தாக்கப்பட்ட சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Nellai police attacked bus conductor video – நெல்லையிலிருந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் சில கைதிகளை அழைத்துக்கொண்டு தமிழரசன் மற்றும் மகேஷ் இரு காவலர்களும் பயணித்தனர்.
அப்போது பேருந்து ஓட்டுனர் அவர்களிடம் டிக்கெட் எடுக்க சொல்லியிருக்கிறார். அப்போது, கைதிகளை அழைத்து செல்லும் காவலர் நாங்கள்.. டிக்கெட் எடுக்க முடியாது என வாக்குவாதம் செய்துள்ளனர். எனவே, வாரண்ட் காப்பியை காட்டுங்கள் என நடத்துனர் கேட்டுள்ளார். ஆனால், நெடுநேரமாகியும் வாரண்ட் காப்பியை அவர்கள் கொடுக்கவில்லை.
இது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் நடத்துனரை காவலர்கள் தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு கண்ணின் அருகே காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.. இந்த விவகாரம் அரசு பேருந்து நடத்துனர்கள் இடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. காயம் பட்ட நடத்துனர் ஒரு வீடியோவையும் வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து அந்த 2 காவலர்களையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருவதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது.