Entertainment
முதல்வரை பார்க்க அனுமதி மறுப்பு- செத்துபோகலாம் போல் இருக்கிறது நெல்லை கண்ணன்
பிரபல பட்டிமன்ற பேச்சாளர் இவர் பட்டிமன்றங்களில் பேசுவது கலகலப்பாக இருக்கும். ஆனால் இவரின் பேச்சு பலரை காயப்படுத்தும் என்பது உண்மை.
இவரை விட வயது குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் பொதுமேடையில் எல்லோரையும் அவன் இவன் என்றே இவர் அழைப்பார். இது பற்றிய சர்ச்சைகள் இவர் மீது அதிகம் உண்டு.
முன்னாள், இந்நாள் முதல்வர்கள், எதிர்க்கட்சித்தலைவர்கள், ஏன் பாரத பிரதமரையே இவர் அப்படி மரியாதை இல்லாமல்தான் அழைப்பார். இதனால் சமூக வலைதளங்களில் இவருக்கு அதிக எதிர்ப்பும் இருந்தது.
இந்த சூழ்நிலையில் முதல்வர் ஸ்டாலினை பார்க்க இவர் அனுமதி கேட்டிருந்துள்ளார். அனுமதி மறுக்கப்படவே, செத்துவிடலாம் போல் தோன்றுகிறது என கூறி இருக்கிறார்.