cinema news
நீட் தேர்வை ரத்து செய்ய எங்களுக்கு தெரியும்- உதயநிதி
தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என ஸ்டாலின் முழங்கி வருகிறார்.
இதற்கு சட்டசபையில் பதிலளித்த முதல்வர் எடப்பாடி கொஞ்சம் கோபமாக பேசினார் இதை கொண்டு வந்தது தங்கள் கூட்டணியின்போதுதானே என கேட்டார். எப்படி ரத்து செய்விங்கன்னு சொல்லுங்க அதை இப்பவே நாங்க ரத்து செய்றோம் என அமைச்சர் விஜயபாஸ்கரும் தெரிவித்தார்.
இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி 30 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவில் உள்ள முதியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் நிச்சயம் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். நீட் தேர்வை எப்படி ரத்து செய்ய வேண்டும் என எங்களுக்குத் தெரியும், தலைவருக்கும் தெரியும். எப்படி ரத்து செய்வோம் என்ற ரகசியத்தை சொல்லுங்கள் என்று ஆட்சியாளர்கள் கேட்டுவருகின்றனர். இதில் ஒரேயொரு ரகசியம்தான். மக்கள் நன்றாக இருக்க வேண்டும், மாநில உரிமைகள் பறிபோக கூடாது என நினைத்தாலே போதும். அந்த ஆளுமை திறன் திமுக தலைவருக்குத்தான் இருக்கிறது” என தெரிவித்தார்.