Connect with us

இது ஒரு தேர்வா நீட் தேர்வு குறித்து கமல் கடும் காட்டம்

Latest News

இது ஒரு தேர்வா நீட் தேர்வு குறித்து கமல் கடும் காட்டம்

இரண்டு தினங்கள் முன்பு நீட் தேர்வு நடந்தது. நீட் தேர்வுக்கு பயந்து சேலம் மாவட்டத்தை சேர்ந்த தனுஷ் என்ற சிறுவன், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கனிமொழி என்ற சிறுமி இருவரும் உயிரிழந்தனர்.

இதற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன்.

ஜெய்ப்பூரில் 35 லட்சம் ரூபாய்க்கு நீட் தேர்வின் வினாத்தாள்கள் வினியோகமாகிக் கொண்டிருக்க இங்கே தனுஷ், கனிமொழி போன்ற அப்பாவி மாணவர்கள் தங்கள் இன்னுயிரை நீத்துக்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு, இந்த வணிக நாடகத்தை அரங்கேற்ற ஒரு அரசு.சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்! என கமல் பதிவிட்டுள்ளார்.

More in Latest News

To Top