நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் மருத்துவ கல்லூரி மாணவர் உதித் சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த மருத்துவர் வெங்கடேசனின் மகன் உதித் சூர்யா. இவர் மும்பையில் நடந்த நீட் தேர்வில் வெற்றி பெற்று, கலந்தாய்வில் கலந்த் கொண்டு தேனி மருத்த்து கல்லுரியில் சேர்ந்து மருத்துவம் படித்து வருகிறார். இவர் ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியதாக புகார் எழுந்தது.
இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அவருக்காக தேர்வு எழுதிய நப மீதும், உதித் சூர்யா மீதும் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான உதித் சூர்யாவை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்நிலையில், செல்போன் டவரை வைத்து அவரை குடும்பத்தோடு திருப்பதியில் போலீசார் கைது செய்தனர். அவர்கள் சென்னை வரவழைக்கப்பட்டு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.