Latest News
நீட் தேர்வுக்கு எதிராக யாரும் போராடவில்லை- அண்ணாமலை
தமிழகத்தில் நீட் தேர்வு அச்சம் காரணமாக அரியலூர் அனிதா உள்ளிட்ட மதுரை மாணவி, தர்மபுரி, நாமக்கல் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
இதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து நீட் தேர்வுக்கு எதிராக போராடி வருகின்றன.
பெற்றோர்கள் பலர் இந்த நீட் தேர்வை எதிர்ப்பதாக கூறி எதிர்க்கட்சிகள் கூறி வரும் நிலையில் அப்படி எல்லாம் இல்லை என்ற ரீதியில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் தற்போதைய பாரதிய ஜனதா துணைத்தலைவருமான அண்ணாமலை கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பாஜக இளைஞரணி சார்பில் நேற்று பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி, நடந்த ‘இளைஞர் எழுச்சிகூட்டத்தில்’ பங்கேற்றுப் அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியது என்னவென்றால்
நீட் தேர்வுக்கு எதிராக எந்த மாணவரும், பெற்றோரும் போராடவில்லை, அரசியல் கட்சித் தலைவர்கள்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தாண்டு நீட் தேர்வு முடிவுகள் அவர்களுக்கு சரியான பதிலைத் தரும். தமிழகத்தில் மாணவ, மாணவிகளின் தற்கொலைகள் இனிமேல் நடக்காது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.