மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு தேர்ச்சி நம் நாட்டில் அவசியம் ஆகிவிட்ட நிலையில், இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெறவுள்ள மாணவர்களுக்கு நீட் தேர்வு வகுப்புகள் நடைபெற உள்ளன.
அரசு மாணவர்களுக்கான முழு நேர வகுப்பு நாளை (மார்ச் 25) முதல் நடக்கவுள்ளது. நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சியை உயர்த்த அரசு இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளது. இதனிடையே, மாநிலம் முழுவதும் 23 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் எடுக்கப்பட்டன. பள்ளி நாட்களில் மாலையிலும், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பாகவும் எடுக்கப்பட்டது.
இந்த பயிற்சியில் சிறந்து விளங்கிய 9 ஆயிரத்து 800 மாணவர்கள் முழு நாள் நீட் தேர்வு பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.கடந்த ஆண்டு போல, 11 நகரங்களில் கல்லூரி விடுதியில் தங்கும் வசதி, உணவுடன் காலை முதல் மாலை வரை இந்த வகுப்புகள் நடைபெற உள்ளன.
நீட் பயிற்சி அனுபவம் பெற்ற பேராசிரியர்கள் மற்றும் வெளி மாநில நிபுணர்களைக் கொண்டு மே 3-ம் தேதி வரை இந்த பயிற்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.