Latest News
நீலகிரி மாவட்ட ஆட்சியரை பாராட்டிய முதல்வர்
கொரோனா தொற்றுக்கு கோவிஷீல்ட், மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பலரும் இன்னும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நிலையே உள்ளது.
இந்நிலையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யாவின் தீவிர முன்னெடுப்பாலும், அரசு அதிகாரிகளின் கூட்டுமுயற்சியாலும் கரோனா பெருந்தொற்றை வெற்றிகரமாக நீலகிரி மாவட்டம் எதிர்கொண்டது, கரோனாவை கட்டுக்குள் வைக்கும்நோக்கில் நீலகிரி மாவட்டத்தில் இரண்டாவது ஆண்டாக இ-பதிவு மற்றும் இ-பாஸ் நடைமுறையில் உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் 6 வகையான பழங்குடியின மக்களையும் கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்திடும் வகையில் வனத்தை ஒட்டிய பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களின்வீடுகளுக்கே சென்று, தடுப்பூசி செலுத்தும் பணியில் அரசின் அனைத்துத் துறையினரும் ஈடுபட்டனர். தடுப்பூசியால் அச்சமடைந்திருந்த பழங்குடியின மக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவரையும் தடுப்பூசி செலுத்தி கொள்ள தயார்படுத்தினர்.
அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தியதில் வேகம் காட்டி முனைப்போடு செயல்பட்டதால் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யாவுக்கு சான்றிதழ் வழங்கி முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார்.