நீ பாதி நான் பாதி பாடலை அழகாக வாசிக்கும் விவேக்

நீ பாதி நான் பாதி பாடலை அழகாக வாசிக்கும் விவேக்

இளையராஜாவின் அதி தீவிர ரசிகர்தான் நடிகர் விவேக். அவர் முதன் முதலில் நடித்த மனதில் உறுதி வேண்டும் தொடங்கி, புதுப்புது அர்த்தங்கள் என ஆரம்ப காலத்தில் விவேக் வளர்ந்த படங்கள் எல்லாம் இளையராஜா இசையமைப்பில் பெரும் ஹிட் அடித்த படங்கள்தான்.

இளையராஜாதான் விவேக்கின் மகள் இருவருக்கும் பெயர் வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அடிக்கொரு முறை இளையராஜாவின் பாடல்களை வீட்டில் உள்ள பியானோவில் வாசிக்கும் விவேக் இம்முறை நீ பாதி நான் பாதி பாடலை வாசித்து அதை பதிவிட்டுள்ளார்.