Entertainment
நாய்கள் ஜாக்கிரதைக்கு 7 வயது
கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி வெளியான திரைப்படம் நாய்கள் ஜாக்கிரதை. நாணயம் படத்துக்கு பிறகு சக்தி செளந்தர்ராஜன் இயக்கிய இந்த திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது.
ஒரு நாயை வைத்து பின்னப்பட்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் இப்படம். இப்படத்தின் கதைப்படி சிபிராஜின் மனைவியான அருந்ததியை வில்லன் கடத்தி சென்றுவிட சிபிராஜ் தத்தெடுத்து வளர்க்கும் நாய் கண்டு பிடிப்பதுதான் கதை.
சிபிராஜுக்கு இப்படம் ஒரு பிரேக் என்று கூட சொல்லலாம் சிறப்பான முறையில் நடித்திருந்தார். 4 கோடியில் படம் தயாரிக்கப்பட்டு 10 கோடி வசூல் செய்தது இப்படம்.
