நயனை ஏன் கல்யாணம் பண்ணிக்கல- விக்னேஷ் சிவனின் பதில்

51

கடந்த 2015ம் ஆண்டு வெளிவந்த நானும் ரவுடிதான் படத்தில் நயன் தாரா கதாநாயகியாக நடித்தார். இந்த படத்தில் நடித்தபோது அப்பட நாயகி நயன் தாராவுடன் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு காதல் ஏற்பட்டது. அப்போதிருந்து இப்போது வரை இவர்கள் காதலர்களாகவே வலம் வருகின்றனர்.

6 வருடங்களுக்கும் மேலாக திருமணமாகாமல் வலம் வருகிறார்கள் இருவரும். இது குறித்து சமீபத்தில் விக்னேஷ் சிவனிடம் ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் கேள்வி கேட்டிருந்தார்,

ஏன் நீங்கள் இன்னும் நயன்தாராவை திருமணம் செய்து கொள்ளவில்லை? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த விக்னேஷ் சிவன், “திருமணத்துக்கு அதிக செலவு ஆகும். அதனால் அதற்கான பணத்தை சேர்த்துவிட்டு, கொரோனா அச்சுறுத்தல் எல்லாம் நீங்கிய பிறகு திருமணம் செய்து கொள்வேன்” என தெரிவித்துள்ளார்.
பாருங்க:  தயவு செய்து கருணை காட்டு!! கொரொனா ப்ளீஸ் போய்டு!!
Previous articleகாவல் நிலையத்துக்கே சென்று போலீசை மிரட்டிய நபர்கள்
Next articleபழம்பெரும் நடிகை ஜெமினி ராஜேஸ்வரி மரணம்