100 படங்கள் நடித்த பின்பே திருமணம் – நயன்தாரா அதிரடி முடிவு

255
Nayanthara plan wedding after completing 100 films

தனது திருமணம் குறித்து நடிகை நயன்தாரா எடுத்துள்ள அதிரடி முடிவு தெரிய வந்துள்ளது.

2005ம் ஆண்டு ஐயா படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. அதன்பின் சில வருடங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம் என கிடைக்கும் படங்களில் நடித்து வந்த அவர் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக மாறினார். கடந்த சில வருடங்களாகவே அவர் நடிக்கும் படங்கள் தொடர்ந்து வெற்றி அடிய அவரின் மார்கெட் ஏறுமுகமாகவே இருக்கிறது. தற்போது ஒரு படத்துக்கு அவர் ரூ.6 கோடி சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது.

இயக்குனர் விக்னேஷும், அவரும் பல வருடங்களாகவே காதலித்து வருகின்றனர். ஆனால், மார்கெட் நன்றாக இருப்பதால் தற்போதைக்கு திருமணம் வேண்டாம் என நயன்தாரா முடிவெடுத்துள்ளாராம். 100 படங்கள் நடித்த பின்பே திருமணம் என்கிற முடிவிலும் இருக்கிறாராம். அநேகமாக இன்னும் 3 வருடங்களில் அந்த இலக்கை அவர் அடைவார் எனத் தெரிகிறது.

பாருங்க:  இயக்குனர் பாலா தயாரிப்பில் ஆர்.கே சுரேஷ் பட பர்ஸ்ட் லுக் வெளியானது