நயன் தாராவுக்கு போட்டியாக அம்மன் வேடத்தில் கஸ்தூரி

நயன் தாராவுக்கு போட்டியாக அம்மன் வேடத்தில் கஸ்தூரி

ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன் தாரா நடிக்க மூக்குத்தி அம்மன் என்றொரு படம் வர இருக்கிறது. முழுக்க முழுக்க அரசியல் நையாண்டிகளை கொஞ்சம் ஆன்மிகம் கலந்தும் கொஞ்சம் நகைச்சுவை கலந்தும் இப்படம் தயாராகியுள்ளது. வரும் தீபாவளி வெளியீடாக இப்படம் வர இருக்கிறது

இந்த நிலையில் நடிகை கஸ்தூரியின் அம்மன் வேடம் ஒன்றும் வைரலாகி வருகிறது. நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பதிவில் அம்மன் வேடத்தில் இருப்பது போன்ற படங்களை பதிவேற்றம் செய்துள்ளார்.

படங்களை பதிவு செய்து விஜயதசமி வாழ்த்துக்கள் என்று கஸ்தூரி கூறியுள்ளார். விஜயதசமி வாழ்த்துக்கள் கூறுவதற்காகத்தான் இந்த படங்களை எடுத்தாரா இல்லை வேறு ஏதேனும் படத்தில் நடிக்கிறாரா என தெரியவில்லை.