Published
10 months agoon
கடந்த 2004ம் ஆண்டு வெளிவந்த ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நயன் தாரா .ஒரு நடிகை 20 வருடத்துக்கும் மேல் சக்சஸ்புல் ஹீரோயினாக தொடர்கிறார் என்றால் தமிழ் சினிமாவில் இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும்.
கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக நயன் தாராவின் நட்சத்திர அந்தஸ்து உயர்ந்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்து கிடைத்துள்ளது.
நயன் தாரா தனியாக கதையின் நாயகியாக நடித்தாலும் அதற்கு மவுசு உள்ளது.
இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இருவரும் சேர்ந்து ரவுடி பிக்சர்ஸ் சார்பாக பல படங்களை தயாரித்து வருகிறார்கள். சில மாதங்களாகவே மிகவும் ஒல்லியாகி விட்ட நயன் தாரா குறித்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
அதுவும் காத்து வாக்குல காதல் படத்தில் மிகவும் ஒல்லியாக காட்சியளிப்பது ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது. ஏன் நயன் இவ்ளோ மெலிந்து விட்டார் என விமர்சனங்கள் எழாமல் இல்லை.