Connect with us

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் இனிதே நடைபெற்று வருகிறது

Entertainment

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் இனிதே நடைபெற்று வருகிறது

எப்பதான் இவர்கள் திருமணம் செய்வார்கள் என நீண்ட நாட்களாக காத்துக்கொண்டிருந்த  பலருக்கு, நயன், விக்கி திருமணம் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

இவர்கள் இருவரும் கடந்த 2015ல் வந்த போடா போடி படத்தில் இருந்து காதலித்து வருகின்றனர். ஆரம்பத்தில் இதை மறுத்த இருவரும், இறுதியில் காதலிக்கிறோம் என ஓப்பனாக காட்டிக்கொண்டனர்.

இருவரும் திருமணம் செய்தேஆக வேண்டும் என்ற நெருக்கடி நிலைக்கு பின்னரே திருமணம் செய்து கொண்டுள்ளனர். இன்று காலை 5.30 மணியளவில் பிரம்ம முகூர்த்தத்தில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணம் நெட்ப்ளிக்ஸ் இணையதளத்தில் மட்டுமே காண முடியும்.

யாருக்கும் ஒரு செல்ஃபோன் எடுத்து செல்லக்கூட அனுமதி இல்லை என்று சொல்லப்படுகிறது.  நயன் தாரா திருமணம் நடக்கிறது என்பதால் தேவையில்லாமல் ரசிகர்கள் அந்த பகுதியை சுற்றி மஹாபலிபுரத்தில் நடமாடி வருகின்றனர் இதனால் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

பாருங்க:  நயன்தாராவே வேண்டாம் - சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு

More in Entertainment

To Top