cinema news
செய்தி ஊடகம் மீது கோபமான இயக்குனர் நவீன்
மூடர் கூடம், அக்னி சிறகுகள், அலாவுதினீன் அற்புத கேமரா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் நவீன். இதில் மூடர் கூடம் என்ற படத்தை தவிர மற்ற படங்கள் ரிலீஸ் ஆகவில்லை.
கொளஞ்சி என்ற படத்துக்கு வசனமும் இவர் எழுதி இருக்கிறார். இந்த வசனங்கள் சர்ச்சைக்குள்ளானது.
இந்த நிலையில் பிரபல ஊடகம் ஒன்று கைதியிடம் களவாடிய கதைதான் கைதி மினி அட்லியான லோகேஷ் என்று செய்தி வெளியிட்டு இருந்தது. இதற்கு நவீனின் பதில்
உங்களுக்கு ப்ளூ டிக்கெல்லாம் வேற குடுத்துருக்கானுங்க
இரண்டு பெரிய இயக்குநர்களை கொச்சை படுத்தியிருக்கிறீர்கள். ஆதாரபூர்வமான செய்தியும், அச்செய்தியை சொல்லும் கவனமான கன்னியமான மொழியும் இரண்டும் சேர்ந்ததே செய்தி அறம். உங்கள் செய்தியில் இரண்டும் இல்லை. என நவீன் சாடியுள்ளார்.