இனிதே ஆரம்பம் ஆகும் நவராத்திரி விழா

18

அம்பிகையரை 9 நாட்கள் வேறு வேறு வடிவங்களில் வணங்கும் நவராத்திரி விழா இன்று ஆரம்பமாகிறது. உலகை காத்து பக்தர்களின் வேதனைகளை தீர்த்து அவர்களின் பாவ புண்ணியங்களை போக்கி வரும் பராசக்தியின் 9 வடிவங்களை 9 நாளும் அலங்கரித்து கொண்டாடுவதே நவராத்திரி விழா ஆகும். 9ம் நாள் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை என வணங்குகிறோம். 10ம் நாள் விஜய தசமி விழா. அன்று எந்த காரியம் தொட்டாலும் ஜெயமாகும் என கல்வி கூடங்களில் பிள்ளைகள் சேர்க்கப்படுகிறார்கள்.

புதிய தொழில்கள் தொடங்கப்படுகிறது. விஜயதசமியன்று அம்பிகை அசுரனை அழித்தாள் என்பது வரலாறு அதனால் அன்று எதை செய்தாலும் வெற்றி என்பது நம்பிக்கை. தமிழகத்தில் குலசேகரப்பட்டினம் கடற்கரையில் மகிசாசுரமர்த்தனியாக வேடம் பூண்டு அசுரனை அழிக்கும் விழா வருடம் தோறும் விஜய தசமி அன்று நடைபெறும்.

இன்று நவராத்திரி விழா தொடங்குகிறது. வீட்டில் பெண்கள் விரதமிருந்து தினமும் ஸ்வாமிக்கு சுண்டல், இனிப்புகள் நிவேதனம் செய்து பெண்கள் வணங்கி வருவர் இதனால் அவர்களது துன்பங்கள் பறந்தோடி சுபிட்சம் எங்கும் நிலவும் என்பது நம்பிக்கை.

இன்று நவராத்திரி விழா இனிதே தொடங்குகிறது.

பாருங்க:  இளம் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் - ஆட்டோ ஓட்டுனரின் காம லீலை