Latest News
நாவரசு கொலை வழக்கில் ஜான் டேவிட்டை விடுதலை செய்ய முடியாது- கோர்ட் அதிரடி
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் நாவரசு. இவரை கடந்த 1996ம் ஆண்டு அண்ணாமலை பல்கலையில் பயின்ற ஜான் டேவிட் என்பவர் ராக்கிங் செய்து கொடூரமாக இவரை கொன்றார்.
ஜான் டேவிட்டுக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்தது கடலூர் மாவட்ட கோர்ட்.
இந்த தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ஜான் டேவிட்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கில் போதுமான ஆதாரம் இல்லை என ஜான் டேவிட்டை விடுதலை செய்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜான் டேவிட் குற்றவாளி என்றும் மாவட்ட கோர்ட் முதலில் கொடுத்த தீர்ப்புதான் செல்லும் என அறிவித்தது.
அதனால் ஜான் டேவிட் தற்போது வரை சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜான் டேவிட்டை முன் கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என அவரது தாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதை கோர்ட் மறுத்து அவரது மனுவை தள்ளுபடி செய்துள்ளது.