காங்கிரஸ் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் – இதுவும் கருத்துகணிப்புதான்!

293

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவே அதிக இடங்களை பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள சில கருத்துக்கணிப்புகள் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது. அதுவும், பாஜக 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என சில முக்கிய தொலைக்காட்சி சேனல்கள் செய்தி வெளியிட்டன.

இந்நிலையில், வட மாநிலங்களை சேர்ந்த சில தொலக்காட்சி சேனல்கள் காங்கிரஸே அதிக தொகுதிகளை பெறும் என கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளது. இது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் - இதுவும் கருத்துகணிப்பு

 பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்காது, மேலும், தொங்கு பாராளுமன்றமே அமையும் மத்திய அரசுக்கு உளவுத்துறை அறிக்கை கொடுத்துள்ளதாக தகவல் கசிந்த நிலையில் இந்த கருத்துக்கணிப்பு காங்கிரஸ் தரப்புக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

பாருங்க:  ஹனிமுன் குறித்து காஜல் அகர்வால்