நடராஜரை இழிவுபடுத்தி யூ டூ ப்ருட்டஸ் என்ற நிறுவனம் சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது. பக்தியாளர்கள், ஆன்மிக நெறியாளர்கள் மத்தியில் கடும் அதிர்வுகளை அந்த வீடியோ ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் தன் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
மத கோட்பாடுகள் மற்றும் இறைநம்பிக்கையை அவதூறாகப் பேசி மக்களின் நம்பிக்கையை அவமதிப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளார் சிலர்! ஆளும் கட்சியின் ஆசி இருப்பது போன்ற ஒரு தோற்றத்தையும் அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். இதுபோன்ற அவதூறுகளைக் கண்டுகொள்ளாமல் அரசு ஏன் கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறது?
நடவடிக்கை எடுக்கத் தேவையான காலம் அவகாசம் கடந்த பின்னும் ஆளும் அரசு செயல்பட மறுப்பது ஏன்? அல்லது இச்சமூகத்தின் சகிப்புத்தன்மையைக் கண்டறிய இது நீங்கள் தேர்ந்தெடுத்த வழியா? என அண்ணாமலை வினவியுள்ளார்.