Latest News
நடராஜர் இழிவு பேச்சு- சிதம்பரத்தில் சிவனடியார்கள் போராட்டம்
யூ டியூபர் விஜய் என்பவன் யூ டூ ப்ரூட்டஸ் என்ற சேனலில், மக்கள் பெரிதும் வணங்கும் தெய்வமான நடராஜரை இழிவுபடுத்தியும் அவரது தாண்டவத்தை விமர்சித்தும் இருந்தான்.
இந்த பிரச்சினை பெரிதாக உருவெடுத்தது. பலரும் கண்டனம் தெரிவித்தனர். நாட்டில் பெரும்பாலான ஹிந்து சமய மக்களின் நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை மக்கள் பொறுத்துக்கொண்டிருக்கவில்லை.
யூ டியூபர் விஜய் என்பவனை கைது செய்ய வலியுறுத்தினாலும் அவன் திராவிட இயக்கத்தை சேர்ந்தவன் என்ற காரணத்தால், அவன் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில் யூ டியூபர் விஜயை கைது செய்ய வலியுறுத்தி சிதம்பரத்தில் பல்லாயிரக்கணக்கான சாதுக்கள் திரண்டு நேற்று போராட்டம் நடத்தினர்.
இதனிடையே இது குறித்து கருத்து கூறியுள்ள பாஜக தலைவர் அண்ணாமலை, சிதம்பரம் நடராஜரை அவதூறாகப் பேசிய நபரைக் கைது செய்யாமலிருப்பதைக் கண்டித்து சிவனடியார்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த ஆட்சியில் மக்கள் மன்றாடிதான் உரிமைகளைப் பெற முடியும், இன்று சாதுக்களையும் போராட்ட களத்தில் தள்ளியுள்ளது அரசு. சாது மிரண்டால் காடு கொள்ளாது என குறிப்பிட்டுள்ளார்.
சிதம்பரம் நடராஜரை அவதூறாகப் பேசிய நபரைக் கைது செய்யாமலிருப்பதைக் கண்டித்து சிவனடியார்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இந்த ஆட்சியில் மக்கள் மன்றாடிதான் உரிமைகளைப் பெற முடியும், இன்று சாதுக்களையும் போராட்ட களத்தில் தள்ளியுள்ளது @arivalayam அரசு.
சாது மிரண்டால் காடு கொள்ளாது. pic.twitter.com/BhIuIhYahr
— K.Annamalai (@annamalai_k) May 23, 2022
