கடவுள் நடராஜரை பற்றி யூ டூ ப்ரூட்டஸ் என்ற யூ டியூப் சேனலில் ஒருவன் சமீபத்தில் மிக ஆபாசமாகவும் அருவருக்கதக்க வகையிலும் பேசி இருந்தான்.
இதற்கு கடும் எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. பலரும் இதை கண்டித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை கஸ்தூரியும் இந்நிகழ்வுக்கு தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
கடவுளை பற்றி பேச கழிசடைகளுக்கு என்ன தெரியும்? பிறப்பின் மூலத்தை பாவமாக பார்ப்பது உங்கள் தலையெழுத்து . லிங்கத்திலும் யோனியிலும் பிரபஞ்சத்தை பூஜிப்பவர்கள் நாங்கள். அதில் வக்கிரம் கற்பிப்பவர்கள் மூடர்கள்.
ஆடியபாதத்தை அறியாத கூமுட்டைகள் எதை தூக்கிகிட்டு வந்தாலும் அங்கு ஒண்ணுமில்லையாம் . அதல்லவோ பெரிய வெட்கம் ! சிலருக்கு ஆண்மையும் உண்மையும் கண்ணுக்கு புலப்படாதுதான், ஆனாலும் இருக்கு என்று நீங்கள் நம்பவில்லையா? தெரியும் வரை தேடுங்கள்- இரண்டையுமே ! என தெரிவித்துள்ளார்.