என் வாழ்க்கையை படமெடுக்க இயக்குனர்கள் விரும்பினார்கள்- நடராஜன்

14

இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் சேலத்தை சேர்ந்த இவர் சமீபத்தில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு ஆஸ்திரேலிய தொடரில் விளையாடி விட்டு ஊர்வந்து சேர்ந்த இவருக்கு சிறப்பான மரியாதை கொடுக்கப்பட்டது.

தற்போது சில நாட்களுக்கு முன் பழனி சென்று மொட்டை போட்டு விட்டு வந்தார் இவர். திடீர் பிரபலமாகி விட்ட நடராஜனுக்கு முன்பு போல் எங்கும் சுதந்திரமாக செல்ல முடியவில்லையாம். மொட்டை போட்டு விட்டு வந்தாலும் அடையாளம் கண்டு கொள்கிறார்களாம்.

இவரது வாழ்க்கையை படமெடுக்க சில இயக்குனர்கள் இவரிடம் அனுமதி கேட்டு வந்தார்களாம்.

ஆனால் இப்போது எனக்கு அதில் ஆர்வம் இல்லை. கிரிக்கெட்டில் முழு கவனத்தையும் செலுத்தவே விரும்புகிறேன் என கூறியுள்ளார் இவர்

சமீபத்தில் கூட சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் இவரை வீடியோ காலில் அழைத்து பாராட்டியுள்ளார்.

பாருங்க:  மீண்டும் ஒன்றிணைந்த இளையராஜா - எஸ்.பி.பி - களைகட்டும் கச்சேரி