342 இடங்களில் முன்னிலை - மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி

342 இடங்களில் முன்னிலை – மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் பாஜக அதிக இடங்களை பிடித்திருப்பதன் மூலம் மீண்டும் மோடியே பிரதமராவது உறுதியாகியுள்ளது.

நாடு முழுவதும் 542 தொகுதிகளில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் கடந்த 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை நடந்தது. இன்று காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இதில், தற்போதுள்ள நிலவரப்படி பாஜக் 343 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. காங்கிரஸ் 93 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. இதர கட்சிகள் 106 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.

ஆட்சியில் அமர 272 இடங்கள் வேண்டும் என்கிற நிலையில் 343 தொகுதியில் பாஜக முன்னணியில் இருப்பதன் மூலம் மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது. காங்கிரஸ் இந்த தேர்தல் படுதோல்வியை அடைந்துள்ளது. எனவே, நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.