முதல்வர் பதவியில் இருந்து நாராயணசாமி ராஜினாமா

21

புதுச்சேரியில் காங்கிரஸின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு முதலமைச்சராக இருந்தவர் காங்கிரஸின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான நாராயணசாமி அவர்கள்.

இந்த ஆட்சிக்கு பல்வேறு முட்டுக்கட்டைகளை முன்னாள் கவர்னர் கிரண்பேடி போட்டார் இது சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் சில நாட்கள் முன்புதான் கவர்னர் பதவியில் இருந்து கிரண்பேடி நீக்கப்பட்டார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து 3 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததால் பெரும்பான்மையை முதல்வர் இழந்தார்.

புதிதாக பொறுப்பேற்ற கவர்னர் தமிழிசை செளந்தர்ராஜன் அவர்கள் , முதல்வர் நாராயணசாமி இன்று சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றார். அதன்படி இன்று சட்டசபை கூட்டப்பட்டதில் இதில் முதல்வர் நாராயணசாமியால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இதனால் முதல்வர் பதவியில் இருந்து நாராயணசாமி ராஜினாமா செய்தார்.

பாருங்க:  நாளை தை அமாவாசை மறவாதீர் முன்னோர்களுக்குரிய முக்கிய நாள்