அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை – நாஞ்சில் சம்பத் காட்டம்

190

சமீபத்தில் வெளியான ஒரு ஆபாச வீடியோ குறித்து பிரபல அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஒரு சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வெளியானது. மதுவை ஒரு கோப்பையில் ஊற்றும் ஒரு பெண்மணி, அருகில் இருக்கும் ஆணிடம் அதை கொடுக்கிறார். அதன் பின் இருவரும் நெருக்கமாக இருக்கின்றனர். அந்த நபர் பார்ப்பதற்கு நாஞ்சில் சம்பத் போலவே இருந்தார். எனவே, இந்த வீடியோவில் இருப்பது அவர்தான் என பலரும் தெரிவித்தனர். அமமுகவிலிருந்து விலகி வருபவர்களின் ஆடியோ மற்றும் வீடியோக்கள் தொடந்து வெளியாகி வருவதால் இந்த சந்தேகம் வலுத்தது.

இந்நிலையில் இதுபற்றி விளக்கம் அளித்துள்ள நாஞ்சில் சம்பத் ‘அந்த வீடியோவை நான் பார்க்கவில்லை. நண்பர்கள் சொன்னார்கள். அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த வீடியோவை யார் போட்டார்கள் என தேடவும் நான் தயாராக இல்லை. புலி வேட்டைக்கு புறப்படுபவன், எலிகளை பொருட்டாக நினைக்க தேவையில்லை. எந்தவிதமான தவறுகளுக்கும் என் வாழ்வில் இடமில்லை. என் பயணம் தொடர்கிறது’ என தெரிவித்துள்ளார்.

பாருங்க:  லோக்சபா தேர்தல் 2019| 2019 மக்களவை தேர்தல் தேதி?