ரஜினி ஒரு மண் குதிரை… பாஜகவின் ஊது குழல் – வெடித்து தள்ளிய நாஞ்சில் சம்பத்

364

ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி நாஞ்சில் சம்பத் பற்றி தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்மிக அரசியலுக்கு வரவுள்ளதாய் கடந்த வருடமே நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தாலும் இதுவரை அவர் அரசியல் அறிவிப்பை வெளியிடவில்லை. செய்தியாளர் சந்திப்பு, பேட்டி உள்ளிட்ட எதிலும் அவர் தனது அரசியல் எண்ணம் பற்றி தெளிவு படுத்தவில்லை.

இந்நிலையில், மதிமுகவிலிருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்து பின் தினகரன் கட்சில் தன்னை இணைத்துக்கொண்டு,பின் அதிலிருந்தும் வெளியேறிய நாஞ்சில் சம்பத் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:

ரஜினி எப்போதும் அரசியலுக்கு வரமாட்டார். தனிக்கட்சியும் துவங்க மாட்டார். அவர் பாஜாகவின் ஊதுகுழல். அவர் ஒரு மண் குதிரை. பாஜகவை ஆதரித்தே அவர் எப்போதும் பேசுவார். அவர் யாரை ஆதரிக்கிறாரோ அவர்களுக்கு தோல்விதான் கிட்டும்’ என அவர் தெரிவித்தார்.

பாருங்க:  விவேக்கின் பல வருட கனவு.. இந்தியன் 2வில் முக்கிய வேடம்....