cinema news
நானி நடிக்கும் மறுஜென்மக்கதை- பல கோடியில் செட் அமைக்கப்பட்டது
தமிழில் நான் ஈ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தவர் நானி. இவர் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வரும் முன்னணி ஹீரோக்களில் இவரும் ஒருவர். இவர் ஷ்யாம் சிங்கா ராய் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
கொல்கத்தாவில் நடக்கும் வரலாற்றுக் கற்பனைக் கதையான இது மறு ஜென்மம் என்கிற கருவை வைத்து எழுதப்பட்டுள்ளது. சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், கீர்த்தி ஷெட்டி ஆகியோருடன் ராகுல் ரவீந்திரன், ஜுஷூ சென்குப்தா, முரளி சர்மா, அபினவ் கோமதம் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கின்றனர். சத்யதேவ் ஜங்கா எழுதியுள்ள இந்தக் கதைக்கு மிக்கி ஜே மேயர் இசையமைக்கிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக அந்த கால கொல்கத்தா நகரத்தை அப்படியே காண்பிப்பதற்காக சுமார் 10 ஏக்கர் அளவில் ரூ.6.5 கோடி செலவில் பிரம்மாண்ட அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தக் கால கொல்கத்தா நகரம், துர்கை கோயில் ஆகியவைப் போல இந்த அரங்கம் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது.