Latest News
கொரோனா என பெயர் வைத்ததால் அவதிக்குள்ளாகி வரும் பெண்
இந்த 6 மாத காலத்தில் அதிகம் உச்சரிக்கும் பெயர் கொரோனா. இந்த பெயரை உச்சரிக்க கூடாது எல்லாவற்றையும் மறந்து விட்டு நம் வேலையை பார்ப்போன் என நினைத்தாலும் யாராவது ஒருவர் இந்த கொரோனா என்ற பெயரை சராசரியாக நம்மிடம் பேசி விடுவர் நாமும் அது பற்றி பேச வேண்டியதாகிறது.
உலகமே வெறுக்கும் கொரோனா என்ற பெயரை ஒரு பெண்ணுக்கு பல வருடங்கள் முன்பே அவரது பெற்றோர் வைத்துள்ளனர். இதனால் அந்த பெண் சொல்லொணா துயரம் அடைந்து வருகிறார்.
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள சுங்கோன் என்ற பகுதியை சேர்ந்தவர் சைன் தாமஸ். இவருக்கு பிறந்த பெண் குழந்தையை எடுத்துக்கொண்டு தான் வணங்கும் தேவாலயத்தின் பாதிரியார்தான் பெயர் வைக்க வேண்டும் பாதிரியாரிடம் கொண்டு சென்றிருக்கிறார்அவரது தந்தை.
அந்த பெண்ணுக்கு கொரோனா என பெயர் வைத்த பாதிரியார் அதற்கு க்ரவுன் என அர்த்தம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
34 வயதாகும் இந்த பெண் கடந்த சில மாதங்களாக மிகுந்த அவதிக்குள்ளாகி வருகிறாராம். இரத்தம் கொடுக்க சென்ற இடத்தில் இப்படியொரு பேரா என மருத்துவர்கள் ஆச்சரியப்பட்டனராம்.
இவருடைய குழந்தைகளே வைரஸ் அம்மா என கூறுகின்றனராம். அதனால் இந்த பெயரின் மீது அதிருப்தியில் இருக்கும் இவர் இதனால் அந்த பெயரை மாற்ற விரும்பவில்லையாம்.