Entertainment
பெரும் வெற்றி பெற்ற ஐயப்ப பக்தி படமான நம்பினார் கெடுவதில்லை படத்துக்கு 36 வயது
ஒரு காலத்தில் புகழ்பெற்ற பல பக்தி படங்கள் வெளிவந்தன. முருக பக்தி படங்கள், விநாயகர் பக்தி படங்கள் , திருமால், சிவன் என எல்லா கடவுள்கள் மேல் நம்பிக்கை செலுத்தும் வகையில் படங்கள் வெளிவந்தன. அப்படி வெளிவந்த பல படங்களை இறையருள் இயக்குனர் என அழைக்கப்படும் கே ஷங்கர் என்பவர்தான் இயக்கியுள்ளார்.
இறையருள் இயக்குனர் ஷங்கர் இயக்கியதில் புகழ்பெற்ற திரைப்படம் என்றால் அது நம்பினார் கெடுவதில்லை என்ற திரைப்படம்.ஐயப்பனின் புகழை சொன்ன படமான இந்த படத்தில் விஜயகாந்த், பிரபு போன்றோர் நடித்திருந்தனர்.
பிரபு இப்படத்தில் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்ற திரைப்படமாகும். இப்படம் வெளியாகி இன்றுடன் 36 ஆண்டுகள் ஆவது குறிப்பிடத்தக்கது.
