Entertainment
நயினார் நாகேந்திரனின் கருத்துக்கு வலுக்கும் அதிமுகவினரின் எதிர்ப்பு
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நெல்லை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆகி போக்குவரத்துதுறை அமைச்சராகவும் இருந்தவர் நயினார் நாகேந்திரன்.
நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அரியலூர் மாணவி லாவண்யா மரணம் தொடர்பாக நடந்த போராட்டத்தில் இதில், பங்கேற்ற பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், சட்டமன்றத்தில் ஆண்மையுடன் பேச அதிமுகவில் ஒருவரும் இல்லை என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது குறித்து அதிமுகவினர் பலரும் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக பேச துவங்கியுள்ளனர்.
இந்த நிலையில் நயினார் நாகேந்திரனின் கருத்து பாஜகவின் கருத்து அல்ல அவரின் சொந்த கருத்து என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இருப்பினும் அதிமுகவுடன் இணக்கமாக இருக்க முயற்சி செய்வோம் என கூறியுள்ளார்.
