தமிழில் பாய்ஸ், காதலில் விழுந்தேன், மாசிலாமணி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நகுல். இவர் சில வருடங்களாக போதிய வாய்ப்பில்லாத காரணத்தால் அதிகம் படங்களில் நடிப்பதில்லை.
இந்த நிலையில் சில வருடங்கள் முன்பு ஸ்ருதி என்பவரை இவர் காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஸ்ருதி மற்றும் நகுல் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருப்பார்கள்.
இவர்கள் குழந்தை பெற்றெடுத்தது சம்பந்தமாக கூட வீடியோ போட்டு இருந்தனர். ஸ்ருதியின் இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு யாரோ அடிக்கடி ஆபாச படங்களை அனுப்பி தொந்தரவு செய்வதாக ஸ்ருதி புகார் அளித்துள்ளார்.
போலிசில் புகார் அளித்தாலும் அவர்களும் கண்டு கொள்வதில்லை எனவும் ஸ்ருதி கூறியுள்ளார்.
கடுமையான சட்டங்கள் கொண்டு வந்து இவற்றை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் ஸ்ருதி கூறியுள்ளார்.