Latest News
நாகர்கோவிலில் அண்ணாமலை தரிசனம்
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அண்ணாமலை. இவர் ஐபிஎஸ் அதிகாரியாக வேலை பார்த்து கர்நாடகாவின் சிங்கம் என பெயர் வாங்கியவர்.
தமிழ்நாட்டில் புதிய இளம் தலைவராக இவர் இருப்பதால் இவருக்கு மவுசு அதிகம் . செல்லும் இடங்களில் எல்லாம் தொண்டர்கள் இவரை சந்திக்க விரும்புகின்றனர்.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்ட தலைநகர் நாகர்கோவிலில் உள்ள புகழ்பெற்ற நாகராஜா கோவிலுக்கு சென்ற அண்ணாமலை அங்கு மக்களை சந்தித்து உரையாடினார்.
இன்று காலை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் உள்ள ஸ்ரீ நாகராஜா திருக்கோவில் தரிசனம் செய்தேன். அங்கு திரளாக கூடி இருந்த பக்தர்களிடமும் கட்சி தொண்டர்கள் இடமும் உரையாடியது மனநிறைவை ஏற்படுத்தியது. கன்னியாகுமரி மாவட்டம் பாஜகவின் கோட்டையாக மாறும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. pic.twitter.com/7tlOCm3pbE
— K.Annamalai (@annamalai_k) July 29, 2021