நடராஜர் சிலை மீது மட்டும் மழை பொழிந்த அதிசயம்- சிதம்பரம் பரபரப்பு

நடராஜர் சிலை மீது மட்டும் மழை பொழிந்த அதிசயம்- சிதம்பரம் பரபரப்பு

தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே பரவலாக மழை பொழிந்து வருகிறது. எல்லா இடங்களிலும் நீர் நிலைகள் இதனால் நிரம்பி வருகிறது. உலகப்புகழ்பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமான தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலில் உள்ள ஒரு நடராஜர் சிலையின் மீது மட்டும் மழை பொழிந்தது அதிசயமாக உள்ளது.

பக்கத்தில் உள்ள சிலை மீது கூட மழை பெய்யாமல் குறிப்பிட்ட அந்த சிலை மீது மட்டும் மழை பெய்துள்ளது காண்போரை பரவசத்திற்குள்ளாக்கியது.

இந்த வீடியோவை யதார்த்தமாக அங்குள்ள பக்தர் ஒருவர் எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

https://www.facebook.com/LotusNewsTV/videos/1826043310884871

https://www.facebook.com/LotusNewsTV/videos/1826043310884871