Connect with us

நாய் சேகர் டைட்டில் அப்போ வடிவேலுக்கு இல்லையா

Entertainment

நாய் சேகர் டைட்டில் அப்போ வடிவேலுக்கு இல்லையா

லைகா நிறுவனம் வடிவேலுவை வைத்து நாய் சேகர் என்ற படத்தை தயாரிப்பதாகவும் அந்த படத்தை சுராஜ் இயக்குவதாகவும் சொல்லப்பட்டது. நீண்ட இடைவேளைக்கு பிறகு வடிவேலு நடிப்பதாலு, டைட்டிலே கேட்சிங் ஆக இருந்ததால் இப்படத்துக்கு எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த நிலையில் இப்பட டைட்டில் சதிஷ் நடிக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு வைக்க இருப்பதாகவும் முன்பே இந்த பெயரை ரெஜிஸ்டர் செய்து விட்டதாக கூறப்பட்டது.

சில தினங்களுக்கு முன்பு பேசிய இயக்குனர் சுராஜ் கூட பேச்சுவார்த்தை போயிக்கிட்ருக்கு.  நாய் சேகர்னு சொன்னா வடிவேல் நடித்த கேரக்டர் என்பதால் அவருக்கு நல்லா இருக்கும். பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். பார்க்கலாம் என சொல்லி இருந்தார்.

இந்த நிலையில் நாய் சேகர் என்று சதீஷ் நடிப்பிலேயே பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. அப்போ நாய் சேகர் டைட்டில் வடிவேலுக்கு கிடையாதா என்பதே ரசிகர்களின் வருத்தமாயுள்ளது.

பாருங்க:  மிஷ்கின் படத்தில் வடிவேலு – சிம்புவுடன் 17 ஆண்டுகளுக்குப் பின் கூட்டணி !

More in Entertainment

To Top