cinema news
வடிவேலுவை புகழ்ந்து தள்ளிய மிஷ்கின்
தென்மாவட்டங்களின் ஹெட்குவார்ட்டர்ஸ் எது என்று கேட்டால் மதுரை நகரை சொல்லலாம். மதுரை நகரை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.
அப்படிப்பட்ட மதுரையில் தூங்கா நகரம் என்ற புத்தக வெளியீட்டு விழா நடந்தது இந்த வெளியீட்டு விழாவில் புத்தகத்தை வெளியிட்டு பேசிய இயக்குனர் மிஷ்கின் மதுரையை ரொம்ப பிடிக்கும் என்றார்.
அது மட்டுமல்லாமல், மதுரை பக்கம் இருந்து சென்ற பாரதிராஜா, இளையராஜா, வடிவேலு, இயக்குனர் பாலா போன்றோரை மிகவும் பிடிக்கும் என்றார்.
குறிப்பாக வடிவேலுவை புகழ்ந்து தள்ளினார். ஒட்டுமொத்த மதுரையின் உஷ்ணத்தையும், ஒட்டுமொத்த மதுரையின் கண்ணீரையும்,ஒட்டுமொத்த மனிதர்களின் மனதையும் வடிவேல் சொல்லி இருக்கிறார் என மிஷ்கின் குறிப்பிட்டுள்ளார்.