கெளரவ வேடத்தில் மிஷ்கின் நடிக்கும் படம்

கெளரவ வேடத்தில் மிஷ்கின் நடிக்கும் படம்

இயக்குனர் மிஷ்கின் சில நாட்களுக்கு முன் விஷால் நடிக்கும் துப்பறிவாளன் படத்தை இயக்குவதாக இருந்தது.பின்பு விஷாலுக்கும் மிஷ்கினுக்கு அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையால் அப்படத்தில் இருந்து விலகினார். விரைவில் அடுத்த படத்தை இயக்க இருக்கிறார்.

இந்நிலையில் இயக்குனர் சசியின் உதவியாளர் இயக்கும் ஒரு படத்தில் கதாநாயகனாக ஜிவி பிரகாஷ்குமார் நடித்து வருகிறார். இப்படத்துக்கு பேச்சிலர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 6 மாதத்தில் கொரோனா லாக் டவுனால் தடைபட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது நடைபெற்று வருகிறது.

பேச்சிலர் படத்தில் இயக்குனர் மிஷ்கின் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். கெளரவ வேடமாக கனமான பாத்திரமாக மிஷ்கின் இதில் நடித்துள்ளார்.

அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை நான்கு நாட்கள் படக்குழுவினர் படமாக்கியுள்ளனர்.