விஷ்ணு விஷாலை மை ஹீரோ என்று டுவிட் இட்ட ஜுவாலா கட்டா

விஷ்ணு விஷாலை மை ஹீரோ என்று டுவிட் இட்ட ஜுவாலா கட்டா

பிரபல பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா, இவரும் பிரபல நடிகரான ராட்சஷன் பட புகழ் நடிகர் விஷ்ணு விஷாலும் நீண்ட நாட்களாகவே சேர்ந்து சுற்றி வருகின்றனர்.

இருவரும் இணைந்து இருப்பது போன்ற புகைப்படங்களை இருவரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இது என்னவோ ஏதோ என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்த நிலையில் மேரா ஹீரோ என தலைப்பிட்டு ஜுவாலா கட்டா இன்று ஒரு படத்தை பகிர்ந்துள்ளார்.

அதில் விஷ்ணு விஷால் ஜுவாலா கட்டாவுடன் இணைந்து உள்ளார்.

இந்த புகைப்படத்தை வைத்து பெஸ்ட் கப்பிள் வாழ்க, கங்க்ராட்ஸ் என இருவருக்கு வாழ்த்துக்களை ரசிகர்கள் அள்ளி தெளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.