முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படம்- நாளை பர்ஸ்ட் லுக்

நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட 800 என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை ஸ்ரீ பதி என்பவர் இயக்குகிறார்.

முத்தையா முரளிதரன் இலங்கையின் கண்டியில் பிறந்த ஒரு தமிழர் ஆவார். கிரிக்கெட் விளையாட்டில் சர்வதேச அளவில் பல சாதனைகளை செய்துள்ள அவர் சுழற்பந்து வீச்சில் பல நுணுக்கங்களை புகுத்தியவர்.

இந்த படம் தயாராக இருந்த நிலையில், முத்தையா முரளிதரன் சிங்களத்துக்கு ஆதரவானவர் தமிழர்களுக்கு எதிரானவர் என சில முக்கிய கட்சிகள், அமைப்புகள் கடுமையாக எதிர்த்தன. அதை எல்லாம் கண்டுகொள்ளாத விஜய் சேதுபதி 800 படத்தில் நடிக்கிறார்.

நாளை மாலை 6.00 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படுகிறது.