Entertainment
சிறப்பான பாடல்களை எழுதிய கவிஞர் முத்துலிங்கம் பிறந்த நாள் இன்று
தமிழ் திரை உலகில் முக்கிய பாடல்களை எழுதிய கவிஞர்களில் முத்துலிங்கம் மிக முக்கியமானவர்.
1973ம் ஆண்டு வெளியான பொண்ணுக்கு தங்க மனசு என்ற படத்தில் இடம்பெற்ற தஞ்சாவூரு சீமையில என்ற பாடலின் மூலம் அறிமுகமானவர் முத்துலிங்கம்.
தமிழ் சினிமாவில் வெளியான பல ஹிட் அடித்த பாடல்களுக்கு சொந்தக்காரர் இவர்.
உதயகீதம் படத்தில் இடம்பெற்ற சங்கீத மேகம், பூவிழி வாசலிலே படத்தின் சின்ன சின்ன ரோஜாப்பூவே, தூறல் நின்னு போச்சு படத்தின் பூபாளம் இசைக்கும் என எண்ணற்ற தேன் சொட்டும் பாடல்களை எழுதியவர் இவர்.
இன்று இவரின் பிறந்த நாள் இவரை வாழ்த்துவோம்.