பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன். கண்டியில் பிறந்த தமிழரான இவர் இலங்கை கிரிக்கெட் அணியின் நீண்ட காலம் சுழற்பந்து வீச்சாளராக இருந்தார். இவரது சுழற்பந்து வீச்சுக்கு ரசிகர்கள் ஏராளம்.
கண்டியில் பிறந்த தமிழராக இவர் இருந்தாலும் சிங்களர்களுக்கு அதிக ஆதரவு கொடுப்பவர் என்ற பிம்பம் இவர் மீது வைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சென்னையில்தான் இவர் திருமணம் முடித்திருக்கிறார். இவரது சுழற்பந்து வீச்சு தவறு என்றும் சில வருடங்கள் முன் சொல்லப்பட்டது. அதை எல்லாம் சரி என நிரூபித்து கிரிக்கெட்டில் அசத்தி வந்தார்.
தற்போது இவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ஒரு படம் தயாராக இருக்கிறது.எம்.எஸ் ஸ்ரீபதி என்பவர் இயக்கும் இப்படத்துக்கு 800 என பெயர் வைக்கப்பட்டது.800 விக்கெட்டுகளை சர்வதேச அளவில் முத்தையா முரளிதரன் வீழ்த்தியதால் அந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இந்த படத்தில் விஜய் சேதுபது நடிக்க கூடாது என ஈழத்தமிழர் அமைப்புகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு காட்டியுள்ளது. அதை எல்லாம் விஜய் சேதுபதி நடிக்கிறார் வரும் 13ம்தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளது