---Advertisement---

மதம் என பிரிந்த போதும், மனிதம் ஒன்றே தீர்வாகும்… முஸ்லிம் தம்பதியினரின் குட்டி கிருஷ்ணன்… வைரலாகும் வீடியோ…!

Published on: August 28, 2024
---Advertisement---

நாடு முழுவதும் நேற்று முன்தினம் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அழகாக கிருஷ்ணர் வேடமிட்டு அலங்காரம் செய்து மகிழ்ச்சி அடைந்தார்கள். அதேபோல் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கிருஷ்ண ஜெயந்தி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அங்கு படம் பிடிக்கப்பட்ட ஒரு வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் முஸ்லிம் தம்பதி தங்கள் பிள்ளைக்கு கிருஷ்ணர் வேடமிட்டு இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும் காட்சிகள் இடம் பெற்று இருக்கின்றன.

8 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இந்த வீடியோவை பார்த்திருக்கிறார்கள். மதத்தை கடந்த மனம், இந்தியாவின் கலாச்சார ஒற்றுமை போன்ற கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள் இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் மிக வைரலாகி வருகின்றது.