தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து மாவட்ட அளவில் உள்ள முக்கிய உறுப்பினர்களை சந்தித்து வருகிறார்.
நேற்று தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது அந்த பகுதியில் வீணைகள் செய்து விற்று வரும் கலைஞர்களை சந்தித்து வந்தார்.
அப்போது அவர் கூறியுள்ளது ,தஞ்சை ராஜகிருஷ்ணபுரத்தில் வீணை இசைக்கருவி செய்யும் கலைஞர்களை இன்று சந்தித்தேன். அடிமை அரசின் பாராமுகத்தால் வீணை செய்யும் கலைஞர்கள் வாழ்வு நலிவடைந்துள்ளது. வீணைகள் விற்பனை அதிகரிக்க நடவடிக்கை தேவையெனும் அவர்களின் குரலை தலைவர் ஸ்டாலின் அவர்களிடம் தெரிவிப்பதாக கூறினேன் என ஸ்டாலின் கூறியுள்ளார்.