Entertainment
இன்று இசையமைப்பாளர் தேவாவின் பிறந்த நாள்
தமிழில் மனசுக்கேத்த மகராசா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் இசையமைப்பாளர் தேவா. முதல் படத்தின் பாடல்கள் இவர் யாரென்று கேட்க வைத்தாலும் இரண்டாவது படமான வைகாசி பொறந்தாச்சு படத்தின் வெற்றியால் அனைவராலும் அறியப்பட்டார்.
குறுகிய காலத்தில் ரஜினியின் அண்ணாமலை படத்துக்கு இவருக்கு இசையமைக்க வாய்ப்பு வந்தது. அதன் மூலம் முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்த தேவா பல வித ஹிட் பாடல்களை கொடுத்தவர்.
சில பாடல்களை காப்பி அடித்தார் என்று இவர் மீது சில எதிர்மறையான விசயங்கள் சொல்லப்பட்டாலும் அதை எல்லாம் உடைத்தெறிந்தவர். பெரும்பாலும் தரமான பாடல்களையே இவர் கொடுத்துள்ளார்.
பாட்ஷா படத்தின் மூலம் அருமையான பின்னணி இசையை கொடுத்தவர். ரஜினி நடித்ததில் மிகப்பெரிய மாஸ் படம் பாட்ஷா அந்த படத்தின் தேவாவின் பின்னணி இசைதான் ரஜினியின் மாஸ் ஆன நடிப்புக்கு வலு சேர்த்தது என சொல்லலாம்.
காதல் கோட்டை, நினைவிருக்கும் வரை, முகவரி, வாலி, என பல படங்களில் தேவா முத்திரை பதித்தார் இன்று தேவாவின் பிறந்த நாள். நாம் அவரை வாழ்த்துவோம்.
